முதல் நாளிலேயே நடிகர் தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படம் வசூலை அள்ளியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘நானே வருவேன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் முதல் நாளிலேயே ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.