திருவள்ளூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் நடிகர் விஷால் பேட்டிஅளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக் கொடுத்து இலவச திருணத்தை அவர் நடத்தி வைத்தார். அத்துடன் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/1787609-mar3-1024x614.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்’’ 11 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த 11 தங்கைகளை மாப்பிள்ளைகளை நன்றாக பாரத்துக்கொள்ள வேண்டும். என்னை பாதிக்கும் வகையில் படப்பிடிப்பு தளங்களில் சம்பவங்கள் நடைபெற்றன. மனதில் தோன்றியதை நான் செய்துவிடுவேன். அதுபோல் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன். திருமணத்தை நடத்தி வைத்தேன்.11 ஜோடிகளின் குழந்தைகளுக்கும் நான் வருங்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன்..என்றார்.
’’நடிகர் சங்கக் கட்டிடம் விரைவில் முடிவடைய உள்ளது. அந்த விழாவுக்கு அனைவரும் வர வேண்டும். 3,500 கலைஞர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகின்றேன். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி என்றார். மேலும் அவர் கூறுகையில் நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அபிநயா என்ற நடிகையுடன் விஷால் காதலில் விழுந்துள்ளதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஏற்கனவே காதலித்து பின்னர் நிச்சயமான பெண்ணுடன் காதலை முறித்துக் கொண்டார் விஷால். தொடர்ந்து அபிநயாவை காதலிப்பதாகவும் தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.