பிக்பாஸ் அபிராமி, கழுத்தில் மஞ்சள் கயிறுடன் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படம், அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ஓரிடத்தைப் பிடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். மாடல், பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை நிகழ்ச்சி நடுவர் என பன்முகத்திறமைக் கொண்ட இவர், நடிகர் அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக கெளரவ ‘டாக்டர்’ பட்டமும் பெற்றுள்ளார் அபிராமி. இந்நிலையில், தற்போது அவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என சந்தேகத்தில் உள்ளனர். இருப்பினும் இது ஏதாவது படத்துக்காகக்கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.