விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதா விஜயகுமார். இதையடுத்து, அவர் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரபல நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ”தன்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு என்னுடைய அப்பா தான் காரணம் என்று கூறியிருக்கிறார். நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான். என் குடும்பத்தில் கவிதா, அனிதா, அருண், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என எல்லோருடைய பெயரையும் எங்க அப்பா குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என்னுடைய பெயர் எதிலும் குறிப்பிடப்படுவதில்லை.
சமீபத்தில் ஒரு நபர் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் என் தந்தை சொன்னது எல்லாமே தவறான அறிவுரைகள் தான். இதனால் தான் அவருடைய பேச்சை நான் கேட்கவில்லை.
அவர் சொன்னதை எல்லாம் அப்படியே கேட்டிருந்தால், என்னுடைய வாழ்க்கையே சிதறி போயிருக்கும். தன்னம்பிக்கை தான் என்னுடைய இப்போதைய பலம். என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்பத் திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அதற்காகத்தான் நான் அவருடைய பெயரை மாற்றவே இல்லை. அதை செய்யவும் மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.