fbpx

’உங்கள் மனைவியின் ஆடையை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்’..!! நடிகர் சதீஷுக்கு வலுக்கும் கண்டனம்..!!

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. சென்னையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில், சன்னி லியோன், சதீஷ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சதீஷ், பாம்பேயிலிருந்து வந்திருந்த சன்னி லியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார் என்று கிண்டலாக பேசினார்.

’உங்கள் மனைவியின் ஆடையை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்’..!! நடிகர் சதீஷுக்கு வலுக்கும் கண்டனம்..!!

நடிகர் சதீஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாடகி சின்மயி, இதுகுறித்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இத்தனை கூட்டம் உள்ள இடத்தில் ஒரு பெண்ணை ஆடை அணிவது குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு. இது ஒன்றும் காமெடி அல்ல. ஆண்கள் இதனை எப்போது நிறுத்துவார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

பெற்ற தாயை உயிரோடு புதைத்த மகன்.. அதிரவைக்கும் காரணம்.!

Thu Nov 10 , 2022
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47) தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் குப்பைகள் க்ளீனிங் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். சக்திவேல் நேற்று இரவில் மது அருந்துவதற்கு தாய் யசோதையிடம்(75) பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று அவர் சொல்லிய போது காதில் போட்டு இருக்கும் நகையை கழட்டி கொடு என்று கேட்டிருக்கிறார் […]

You May Like