தமிழ் சினிமாவில் ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார். மேலும், தங்கலான் ரோலுக்காக அதிகம் நேரம் மேக்கப் போட்டு அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது மாளவிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ‘யார் அவர்?’, ‘ஒருவேளை இருக்குமோ’ என கமெண்டில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும், அவர் அதில் எப்போதும் கூட இருக்கும் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.