இயக்குநர் கௌதம் மேனனின் மகன் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிம்புவை ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் மனைவி பிரீத்தி மேனன். இவர்களது மகன் ஆர்யா யோஹன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடியிருக்கிறார். அவர் மிகவும் அர்ப்பணிப்பான மகன், நிறைய பயிற்சிகளும் நிறைய பணிகளும் அதன் பின்னால் உள்ளது என தனது மகன் குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
