fbpx

ஜி.பி.முத்து வெளியேறுகின்றாரா? வேண்டாம் தலைவரே ரசிகர்கள் குமுறல் ….

பிக்பாஸ் சீசன் 6 ல் இருந்து இந்த வாரம் ஜி.பி. முத்து வெளியேறுவதாக ப்ரோமோ வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. இந்தவாரம் ஜி.பி.முத்து டாஸ்கில் வெற்றி பெற்று முதல்வாரத்தின் கேப்டன் ஆனதால் அவரை நாமினேட் செய்யமுடியாது. இது ஒரு நல்ல வாய்ப்பு என்றாலும் அவர் தாமாக முன்வந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனது குடும்பத்தை பிரிந்து இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியவில்லை என அழுதுகொண்டே ஜி.பி. முத்து வருத்தப்பட்டு பேசினார். இதன் காரணமாக அவர் தாமாக முன்வந்து வெளியேறுகின்றார். கமல் வந்து பேசியபோதும் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அவர் தெளிவாக கூறி உள்ளாராம்.
ஆறாவது சீசன் தொடங்கியதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு கூடியிருந்த நிலையில் முக்கால்வாசி ரசிகர்கள் ஜி.பி. முத்துவுக்காகவே நிகழ்ச்சியை பார்த்தனர் . வேண்டாம் அண்ணா வாய்ப்பை தவற விட வேண்டாம் என பலரும் கூறி வந்தனர். குடும்பத்தையும் குழந்தைகளையும் நினைத்து மூச்சுவிட முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் வெளியேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று சாந்தி வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Post

விதிமீறி பட்டாசு வெடித்தால் புகார் கொடுங்கள்... காவல்துறை ஆணையர் அறிவிப்பு..

Sat Oct 22 , 2022
தீபாவளியன்று உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாலோ புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி , சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் , புரசை வாக்கம் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவார் ஆய்வு செய்தார்.கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் […]

You May Like