பிக்பாஸ் -6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 6-வது சீசுன் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் முதல் ஆளாக உள்ளே நுழைந்தது ஜி.பி.முத்துதான். அதே நேரத்தில் தானே முன் வந்து தன் மகனுக்காக நான் வெளியேறுகின்றேன் என கூறியதும் ஜி.பி.முத்துதான். 16 போட்டியாளர்களுள் ஒருவரான ஜி.பி.முத்து மக்களின் மனதைக் கவர்ந்து திறம்பட விளையாடினர்.
முதல் வார கேப்டன் டாஸ்கில் கூட வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம்பெற்றார். கன்டென்டுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது டி.ஆர்.பி. உயரப்போகுது என நினைத்த விஜய்டிவியும் இவரது முடிவால் ஏமாற்றம் அடைந்தது.
இந்நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு அவருக்கு ரூ.15000 க்கு மேல் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இரண்டு வாரம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்துள்ளார். எனவே அவருக்கு ரூ.2.10 லட்சம் கொடுக்கப்பட்டது. இதே போல அவர் மாதம் ரூ.1 லட்சம் யூடியூபில் மட்டும் வருமானம் ஈட்டி வருகின்றாராம்..