நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற தகவல்கள் வெளி வந்த நிலையில் அவர் தனது தோழியின் கணவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகின்றது.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4.ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது.அவர் ஒரு தொழிலதிபர் எனவும் ஹன்சிகா மோத்வானியுடன் கடந்த 2020ல் இணைந்து ஈவன்ட்கள் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஈஃபில்டவர் முன்பு இருவரும் மிக ரொமான்டிக்காக போஸ் கொடுத்து தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். அவர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில் தொழிலதிபர் சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவகரத்தானவர் என்பதும் இரண்டாவதாக ஹன்சிகா மோத்வானியை திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. அவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் ஹன்சிகா மோத்வானிக்கு மிகவும் நெருக்கமான தோழி என்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
கடந்த 2016ம் ஆண்டில் ரிங்கி என்ற பெண்ணைத்தான் சோஹைல் திருமணம் செய்திருந்தார். அதில் ஹன்சிகா மோத்வானியும் பங்கேற்றதாக சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றது. இதையடுத்து சோஹைல், ரிங்கு, மோத்வானி நெருங்கியவர்களானார்கள். ஹன்சிகாவின் சகோதரருக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திலும் சோஹைல் பங்கேற்றார் என கூறப்படுகின்றது.