விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் விரும்புகின்றனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகை பாவனி ரெட்டி, அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியேறிய பின்னர், தங்களது காதலை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
அமீர், பாவனி ஆகிய இருவருமே எப்போதும் ஜோடியாக சுற்றும் நிலையில், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வந்தனர். பாவனி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாலும், அமீர் ‘இப்படியே இருக்கலாமே’ என திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் தான் பதிலளித்து வந்தார்.
இந்நிலையில், ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய நடிகை பாவனி ரெட்டி, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த ரசிகர் நீங்கள் சிங்கிளா? என கேட்டார். அதற்கு ஆம் என பாவனி பதிலளித்துள்ளார். இதனால், அமீரை பாவனி பிரேக் அப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.