fbpx

பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? பத்து தல படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை சீரியலின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்த பிரியா பவானி சங்கர், எளிமையான தோற்றத்துடன் நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் இருப்பதால் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுவும் சிம்புவின் பத்து தல படத்திற்குப் பிறகு அவர் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார். இவர், பத்து தல படத்திற்காக ரூ.75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.

தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக பிரியா பவானி சங்கருக்கு ரூ.1 கோடியை சம்பளமாக கொடுத்துள்ளனர். நாளுக்கு நாள் பிரியா பவானி சங்கரின் மவுசு கூடிக் கொண்டே இருப்பதால் டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, பொம்மை போன்ற படங்களும், ஜீப்ரா என்ற தெலுங்கு படத்தையும் கைவசம் வைத்துள்ளார். பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்தமாக சொத்து மதிப்பு 7.5 கோடிகள் ஆகும். அது மட்டுமல்ல இவருக்கு ஈசிஆரில் சொந்தமாக ஒரு சொகுசு பங்களாவும் உள்ளது.

அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் காண்டோ கார் போன்ற விலை உயர்ந்த கார்களும் வைத்திருக்கிறார். இவ்வாறு அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது இருக்கும் டாப் நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் ஹீரோயின் ஆக மாறி கொண்டு இருக்கிறார். முன்னணி நடிகர்களும் தமிழ் பேசும் ரியல் தமிழ் நடிகையான பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பதால், அவரது மார்க்கெட் ரேட் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது.

Chella

Next Post

ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய அஞ்சலி - ஜெய்..!! திடீர் பிரிவுக்கு இதுதான் காரணமா..? உண்மை உடைத்த பிரபலம்..!!

Tue Apr 18 , 2023
’எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஜெய், அஞ்சலி இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். பின்னர், சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதல் பறவைகளாக சுற்றி திரிந்தனர். இது பற்றி மீடியாக்களில் பல செய்திகள் வெளிவந்தாலும் சம்பந்தப்பட்ட இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் ஒரே வீட்டில் தங்கியது திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் தெரியும். […]

You May Like