சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களுக்குப் பின் ‘சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்நிலையில், சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பது உறுதியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில், அந்த கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.