சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவர் தற்போது தனது முகநூலில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
நடிகை ராதா, ஆந்திராவை சேர்ந்தவர். கடந்த 2002ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறார். அடுத்து இவர் கேம், அடாவடி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த கடைசி திரைப்படம் காத்தவராயன் 2008 என்பதுதான். பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரையிலும் பைரவி என்ற தொடரில் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த இவர், அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகையாக இருந்தார்.
பின்னர், தொழிலதிபர் பைசல் 6 வருடங்களாக தன்னோடு வாழ்ந்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறையைச் சார்ந்த வசுந்திராராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பகுதியில் நடித்து வருகிறார். தன்னை பற்றி அடிக்கடி இதுபோன்ற சர்ச்சை மிகு கருத்துக்கள் வெளிவந்த போதிலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பணியாற்றி வருகிறார். தற்போது மீண்டும் திரையுலகில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தின் பெயர் என்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தை ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இந்த படத்தில் கலையரசன், ஜான் விஜய், சந்தோஷ், விதார்த் போன்றவர்கள் நடிக்க உள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை பி வாசு மற்றும் தங்கர் பச்சான் இடம் பணியாற்றிய உதவி இயக்குனர் சாபோ கணேசன் தான் இயக்குகிறார். இது ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. மீண்டும் திரைக்கு ரி என்ட்ரி கொடுத்திருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ந்துவரும் வேளையில் இவர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டதாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாக செய்திகள் பரவி வருகிறது. இதனை அடுத்து, தான் நலமோடு உயிரோடு இருப்பதாகவும், இது போன்ற வீண் வதந்திகளை பரப்பி தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்பதை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.