விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில், முக்கிய சீரியலாக கருதப்படும் முத்தழகு சீரியல் வெளியிட்ட ப்ரோமோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவத்தி நாயகனாகவும் ஷோபனா இந்த சீரியலின் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மலரும் காதல் தற்போது ரொமான்ஸை எட்டியுள்ளது.
தற்போது முத்தழகு தொடர் 500-வது எபிசோடை கடந்துள்ள நிலையில், ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் ப்ரோமவுக்கு பிறகு விஜய் டிவி வெளியிட்ட இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் முத்தழகு சீரியலில் முத்தக்காட்சியா என்று வாயை பிளக்க வைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த ப்ரோமோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.