சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால் ஸ்ரீதிவ்யா அதிகம் பிரபலம் ஆனார். அதன் பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் எதுவும் இல்லை. மேலும், அவர் சமீபத்தில் மலையாளத்தில் ப்ரித்விராஜின் ஜனகனமன படத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் அவர் கைவசம் இல்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளார். இதற்கிடையே, ஸ்ரீதிவ்யா விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.