சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணமாகி குழந்தை பிறந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் பொம்பி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா.
இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சந்திரமுகி படத்தில் சின்ன குழந்தையாக நாம் பார்த்த பொம்மி என்கிற பிரகர்ஷிதாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.