சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. பெண் அடிமைத்தனத்தைக் கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அந்தவகையில், இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதாவாது ஆதி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் ஆகின. அதிலும் குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டித்தொட்டியெங்கும் பரவியது. இந்நிலையில், இவரின் திடீர் உயிரிழப்பானது சீரியல் குழுமத்திற்கு மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.