2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!!
பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். ஆனால் சில சிறிய படங்களை பொறுத்தவரையில் அந்தளவிற்கு ப்ரோமோஷன் இருக்காது. எனினும் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் இவை ஒன்று சேர்த்து ஒரு அம்சமாகி படம் ஹிட்டாகிவிடுகின்றது. அப்படி சத்தமில்லாமல் ரிலீசாகி அதிரடிகாட்டிய படங்களைப்பற்றி பார்க்கலாம்.
பரோல்: த்வராகராஜ் இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளியான பரோல் திரைப்படம் த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாகும். கல்பிக்க கணேஷ், ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா போன்றவர்கள் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்கு விஜய்சேதுபதி கதை எழுதியுள்ளார். ட்ரைலரில் விஜய்சேதுபதி கதையை விளக்கும்வண்ணம் அமைந்துள்ளது.
மிரள்: நடிகர் பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் மிரள் ஹாரர்,த்ரில்லர் படமாக வெளியாகி கதையில் விறுவிறுப்பும் , வாணி போஜனின் நடிப்பும் இத்திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. மேலும் பரத் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இதில் ரீ.என்ட்ரி ஆகி உள்ளார்.
லவ்டுடே:நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கி ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே, கோமாளி திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ அதற்கு ஒரு படி மேலாகவே லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. காதல், குடும்பம், சென்டிமெண்ட், யுவனின் இசை என இத்திரைப்படத்தில் அனைத்துமே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
டிரைவர் ஜமுனா : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பிற்கு அடுத்த ஒரு படி எனலாம். படம் முழுவதும் காரிலேயே படத்தின் கதைகள் நடக்கும் வகையில் இயக்குனர் கிங்ஸ்லி இயக்கி உள்ளார் இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எப்போது என்ன நடக்கும் என யூகிக்க முடியாத படி திரில்லிங்காக அமைந்துள்ளது.
யசோதா:நடிகை சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் இரண்டாவது படம் யசோதா. பணத்திற்காக வாடகைத்தாயாகும் சமந்தா பின்னர் சில சவாலான விஷயங்களை சமாளிக்கின்றார். எப்படி அதை எதிர்கொள்கின்றார் என்பது கதை. கர்ப்பிணியாக நடித்துள்ள சமந்தா செய்யும் சண்டை காட்சிகள் ஆக்ஷன் ஹீரோயினாக இதில் அறிமுகப்படுத்தி உள்ளது.