90-களில் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்களை கூட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்தவகையில், சரத்குமார், ராதிகா, தேவையானி என பலர் நடிப்பில் வெளியான ஒரு படத்தை 25 வருடங்களுக்கும் மேலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது ’சூர்யவம்சம்’ படத்தை தான். இப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஹேமா.
இவர் அப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்திருக்கிறார். சிறுவயதில் நாம் பார்த்த ஹேமாவுக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையே உள்ளதாம். அவ்வப்போது அவர் தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.