தமிழில் நடிகர் விஜய் நடித்த காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஒன்று ஷாஜகான். கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா ஜோடியாக நடிக்க 2001ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. மணி ஷர்மா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இதில், விஜய்யின் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டினாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகள் நடித்திருப்பார்.
இதனைத்தொடர்ந்து காதல் கிருக்கன், சம்திங் சம்திங் படங்களிலும் நடித்திருந்தார். தற்போது நடிகை ரிச்சா பலோட் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட ஷாஜகான் பட நடிகை ரிச்சாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.