தமிழில் விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். அதனைத் தொடர்ந்து ‘யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CuMlI8pLUXd/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
அதிலும் குறிப்பாக வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து நல்ல பாராட்டுக்களை பெற்றார். அதில், இவர் தனது ரீல் அண்ணன் விஜய்யுடன் இணைந்து செய்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அதை இன்றும் நம்மால் மறக்க முடியாது. இந்நிலையில், இவர் தற்போது ஊஞ்சலாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “முன் இருந்ததை விட இப்போது சற்று உடல் எடை அதிகரித்து விட்டீர்கள்” எனக்கூறி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.