fbpx

’இந்த காரணத்துக்காக தான் என்னை தப்பா பேசுறாங்க’..!! நடிகர் வடிவேலு ஓபன் டாக்..!!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வடிவேலு, தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது பிரச்சனையெல்லாம் முடிந்து மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். இவர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

’இந்த காரணத்துக்காக தான் என்னை தப்பா பேசுறாங்க’..!! நடிகர் வடிவேலு ஓபன் டாக்..!!

இந்நிலையில், நடிகர் வடிவேலு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, ”தான் ஒரு திமிரு பிடிச்சவன் என்று பலர் கூறி வருவதற்கான காரணத்தை வடிவேலு தெரிவித்துள்ளார். தன்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப் பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலுக்கு ரொம்ப திமிரு, என்ன ஆட்டம் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள். மக்கள் ரசிக்கனும், அதற்காக தான் நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் தான் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு” என பதிலடி கொடுத்துள்ளார் வடிவேலு.

Chella

Next Post

2023இல் என்னவெல்லாம் நடக்கப்போகிறது..? பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்..!!

Sun Dec 4 , 2022
2022ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புது ஆண்டுக்கான ஜோசியம் பார்க்கும் படலம் ஏற்கெனவே தொடங்கியிருக்கும். அதேபோல ஆண்டுதோறும் மாறாத ஒரு வழக்கமாகவே இருக்கிறது பாபா வாங்காவின் கணித்து குறித்த தகவல்கள். ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு. […]
2023இல் என்னவெல்லாம் நடக்கப்போகிறது..? பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்..!!

You May Like