fbpx

அது ஒரு ’நரி’ கூட்டம்..!! பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்த ராபர்ட் மாஸ்டர்..!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களையும் டார்லிங் …டார்லிங் என்று அழைத்து போட்டியாளர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே ரச்சித்தாவிற்கு ரூட்டுவிட்ட ராபர்ட் மாஸ்டர், அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார். கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் சிக்கிய இவர், குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ராபர்ட் மாஸ்டர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என கருதிய ரசிகர்களுக்கு, அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல், ரச்சித்தாவின் பின்னால் சுற்றி கெடுத்துக்கொண்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

அது ஒரு ’நரி’ கூட்டம்..!! பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்த ராபர்ட் மாஸ்டர்..!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் அளித்துள்ள பேட்டியில், ”எப்படியோ நரி கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார். விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசிம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை, கமல் சார் மட்டும் தான் சிங்கம் என்றார்.

அது ஒரு ’நரி’ கூட்டம்..!! பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்த ராபர்ட் மாஸ்டர்..!!

மேலும், ரச்சித்தாவை என்ன என்று சொல்லவில்லையே என கேட்க, அவங்களை பத்தி கேட்காதீங்க ப்ளீஸ் என்றார். பிடித்த போட்டியாளர்கள் அமுதவாணன், ரச்சிதா, ஷிவின் என்றார். பிடிக்காதவர்கள் அசீம், தனலட்சுமி, ஜனனி அவங்ககிட்ட நான் தள்ளியே இருப்பேன் என்றார். திங்கள் முதல் வியாழன் வரை வீட்டில் ஒரே சண்டையாக இருக்கும், ஆனால் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அனைவரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள்” என்றார்.

Chella

Next Post

இனி ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை..!! மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

Fri Dec 2 , 2022
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் […]
இனி ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை..!! மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

You May Like