பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 7-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் பலமே நடிகர் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் விதம், போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் கொடுக்கும் முறை என ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அடுத்தவாரம் கமல் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஒரு ஆவலை ஒவ்வொரு வாரமும் ஏற்படுத்துவதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த சீசனில் என்றும் இல்லாத அளவுக்கு ஒரு புதுமையை கொண்டுவரும் முயற்சியில் பிக்பாஸ் குழு ஈடுபட்டுள்ளது. இதுவரை ஒரு வீடாக இருந்த பிக்பாஸ் வீடு இந்த சீசனில் இரண்டு வீடாக மாறப்போகிறது. அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த முறை இரண்டு கனீர் குரல்கள் ஒலிக்க இருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கும் சம்பளம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சீசனுக்காக கமலுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 130 கோடியாம். ஆரம்பத்தில் வெறும் 6 கோடி வாங்கிக் கொண்டிருந்த கமல், இம்முறையை 130 கோடியை சம்பளமாக பெறுகிறாராம். அதற்கு பின்னனியில் எதாவது ஒரு காரணம் இருக்கும் என்று விசாரித்ததில் பெரும் சூட்சமுமே நடந்திருக்கிறது. பிக்பாஸுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இதில் தன்னையும் ஒரு பார்ட்னராக இணைத்துக் கொள்ள விரும்பினாராம் கமல். அப்படி பார்ட்னராகிவிட்டால் இதை விட பெரும் தொகை அவருக்கு கொடுக்க வேண்டி வரும். இதை கருத்தில் கொண்டே பிக்பாஸ் குழு ஒரு பெரும் தொகையை கொடுத்து கமலை ஆஃப் செய்திருக்கிறதாம்.