fbpx

”இது ஜெயிலர் வாரம்”..!! மாமனாரை காக்கா பிடிக்கும் தனுஷ்..? வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!

நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று திரைப்படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இறுதியாக ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி ரசிகர்கள் அவரை திரையில் பார்த்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிப்பில் திரைக்கு ஒரு படம் வரவிருப்பது, அவரது ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

கணவர் குடிக்கும் காபியில் தினமும் விஷத்தை கலந்த மனைவி..!! ரகசிய கேமரா..!! சிக்கியது எப்படி..?

Mon Aug 7 , 2023
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 34 வயது பெண் ஒருவர், பல மாதங்களாக தினமும் காஃபியில் ப்ளீச் எனப்படும் சலவை பவுடரை கலந்து கொடுத்து தனது கணவரை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்பெண் காபியில் ப்ளீச் கலக்கும் வீடியோவை எடுத்து அவரது கணவர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார். அரிசோனா மாகாணம் டஸ்கான் பகுதியைச் சேர்ந்த மெலடி ஃபெலிகானோ ஜான்சன் என்பவர் மீது கொலை முயற்சி, மோசமான தாக்குதல் முயற்சி மற்றும் உணவு அல்லது […]

You May Like