fbpx

’சும்மாவே இருக்குறது இல்ல போல’..!! சிம்புவை ஹன்சிகா பிரேக் அப் செய்ய இதுதான் தெரியுமா..? உண்மையை உடைத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் பல பிரச்சனைக்கு பேர் போன ஆளாக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. போற இடமெல்லாம் முட்டி முட்டி மோதுகிற இடமாகவே சிம்புவிற்கு இருந்தது. இவர், தற்பொழுது கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் சிம்புவின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாகவே அமைந்தன.

அடுத்ததாக கமல் புரொடக்ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், அவரைப் பற்றிய ஒரு சீக்ரட்டை திரை விமர்சகர் வித்தகன் சேகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது பல முன்னணி நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய சிம்பு, நடிகை நயன்தாராவுடன் இருந்த காதலை மட்டும் தான் வெளிப்படுத்தி இருந்தார். இருந்தாலும் ஹன்சிகா, த்ரிஷா போன்ற பல நடிகைகளுடன் சிம்புவிற்கு காதல் ஏற்பட்டது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் சின்ன குஷ்புவாக திடீரென உள்ளே நுழைந்தார் ஒரு நடிகை. பல வெற்றி படங்களில் நடித்து வந்த அவர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் காதலுக்கு சிம்புவின் தந்தை டி ராஜேந்திரனும் பச்சைக்கொடி காட்ட திருமணம் வரைக்கும் சென்றதாம். ஆனால், அந்தத் திருமணம் திடீரென நின்று விட்டதாம். அதற்குக் காரணம் சிம்பு தான் என வித்தகன் சேகர் கூறியிருக்கிறார். அதாவது அந்த நடிகையிடம் சிம்பு திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என ஒரு கண்டிஷனை போட்டாராம்.

இதில் அந்த நடிகைக்கு விருப்பம் இல்லை. ஆதலால் இனிமேல் இது செட் ஆகாது என சிம்புவை விட்டு பிரிந்து சென்றாராம். மேலும், கடந்த ஆண்டு தான் அந்த நடிகைக்கு திருமணம் நடந்தது. தன்னுடைய திருமணத்தை பிரபல ஓடிடியில் வெளியிட்டு பேசிய அந்த நடிகையிடம் சிம்புவை பற்றி கேட்டார்கள். அதற்கு அந்த நடிகை சிம்பு உடனான காதலை மறக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் அந்த நேரத்தில் தான் தற்போது என் கணவராக இருக்கும் இவர் காதலை வெளிப்படுத்தி இருந்தார் என்றும் அந்த காதலை ஏற்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.

Chella

Next Post

27 வயது வரைக்கும் பாலியல் தொல்லை..!! என் அம்மாவும்..!! 2 முறை சாக முயன்றேன்..!! ’காதல்’ பட நடிகையின் மறுபக்கம்..!!

Thu Jul 6 , 2023
தமிழில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சரண்யா நாக், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004இல் வெளியான ‘காதல்’ படத்தில் சந்தியா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க தேர்வானவர். ஒரு சில காரணங்களால் சந்தியா ஹீரோயின் ஆக மாற, சரண்யா நாக் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, பேராண்மை உள்ளிட்ட […]
27 வயது வரைக்கும் பாலியல் தொல்லை..!! என் அம்மாவும்..!! 2 முறை சாக முயன்றேன்..!! ’காதல்’ பட நடிகையின் மறுபக்கம்..!!

You May Like