ரஜினிகாந்தின் படம் குறித்த எந்த தகவல் வெளியானாலும், அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும், அவரின் படம் வெளியாகிறது என்றால், திருவிழா போல கொண்டாடி விடுவார்கள். அந்தவகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது ஜெயிலர் திரைப்படம்.
இப்படம் மூலம் 24 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முதல் நாளே சுமார் ரூ.100 கோடி வசூலை எட்டிய ஜெயிலர் திரைப்படம், 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகளவில் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மொத்தமாக 410 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Read also: 500 கோடி எல்லாம் இல்லை…! ஜெயிலர் படத்தின் வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு…! விக்ரம் படத்தை கூட இன்னும் தொட வில்லை…!