fbpx

Jailer | புதிய சிகரம் தொட்ட ’ஜெயிலர்’..!! இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக.10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை உலகளவில் ரூ. 540 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.163 கொடுக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே, ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் நெல்சனே பேசியுள்ளார். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து காமெடியனாக நடித்த ரெடின் கிங்ஸ்லி நெல்சனை பேட்டி எடுத்தார். அதில் ஒரு கேள்வி தான் இந்த கார் பரிசு விவகாரம். வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குதாமே என ரெடின் கேட்டவுடன் ஷாக் ஆன நெல்சன், அதை நானும் கேள்விப்பட்டேன், நடந்தா சந்தோஷம் என தன் ஆசையை சைடு கேப்பில் கூறிவிட்டார்.

இதன்மூலம் தனக்கு இன்னும் எந்த காரும் பரிசாக வழங்கப்படவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் நெல்சன். ரெடினை தன் பங்கிற்கு கலாய்க்கும் விதமாக ஜெயிலர் வெற்றியால் அனைவருக்கு டிவி பரிசாக வழங்கப்படவுள்ளதாக நெல்சன் கூறியதுடன், ஷாக்கான ரெடின், சரி நீ என்ன பண்ண போற எங்களுக்கு என நெல்சனை கேட்க, அவரோ, ஆளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க எனக்கூறி அந்த பேட்டியை காமெடி களமாக்கினார்.

Chella

Next Post

Aadhaar | ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வேண்டுமா..? இதை மட்டும் மறந்துறாதீங்க..!! இந்த தேதி தான் கடைசி..!!

Thu Aug 24 , 2023
இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை (Aadhaar) வழங்கப்படுகிறது. இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, அவ்வபோது ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆதார் செயலில் உள்ளதா? என்பதையும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது. […]

You May Like