நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.
மேலும், ஜெயிலர் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் வெளிவந்த 9 நாட்கள் முடிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும், கண்டிப்பாக ரூ. 500 கோடியை கடந்து வசூலில் இமாலய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.170 கோடி வரையும், இந்திய முழுவதும் ரூ.230 – ரூ.250 கோடி வரையும் கலெக்ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்காவில் தான் 5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர். லோகேஷின் விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களின் முதல் வாரம் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.