ஜவான் திரைப்படம் வெளியாகி 11 நாள் நிறைவடைந்த நிலையில், இப்படம் ரூ.800 கோடியை வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளது. இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. உலகம் முழுவதும் 5 நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்தது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ரூ.500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், பத்தாவது நாளான ஜவான் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் பட்டியலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, ஜவான் படம் கிட்டத்தட்ட ரூ.797.50 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும், ஜவான் திரைப்படம் 11-வது நாள் நிறைவடைந்த நிலையில், இப்படம் ரூ.800 கோடியை வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.