fbpx

வசூலில் படு அடி வாங்கிய ’ஜவான்’..!! இப்படியே போன கண்டிப்பா கஷ்டம் தான்..!!

இயக்குனர் அட்லீ, தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அடுத்தடுத்து ஹாட்ரிக் படங்களை கொடுத்த ஒரே இயக்குநர் அட்லி தான்.

தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் ஹிந்தியில இப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. எல்லா மொழிகளிலும் படத்திற்கான வசூலும் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜவான் திரைப்படம் வெளியாகி இரண்டு நாள் முடிவில் ரூ. 1.50 கோடி வரை வசூலித்துள்ளதாம். ரூ. 2 கோடி என்பது 25% தான் என்கின்றனர். இப்படியே போனால் படம் கண்டிப்பாக நஷ்டத்தை சந்திக்கும் என்கின்றனர். படம் லாபம் அடைய ரூ. 17 கோடி வரை வசூலிக்க வேண்டுமாம், ஆனால் அது கண்டிப்பாக கஷ்டம் என்று கூறி வருகின்றனர்.

Chella

Next Post

மக்களே மத்திய அரசின் கீழ் பணியாற்ற ஆசையா….? இந்திய தொலைதொடர்பு துறையில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு…..!

Sat Sep 9 , 2023
இந்திய தொலைத் தொடர்பு துறை தற்போது காலியாக இருக்கின்ற பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்சமயம் engineer, junior wireless officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தியா முழுவதும், இந்த பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் masters degree, diploma in engineering போன்ற […]

You May Like