நடிகர் விஜய் லியோ படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தளபதி 68 மட்டுமின்றி, ஒரே காரணத்திற்காக இன்னொரு விஜய் படத்திலும் ஜோதிகா நடிக்க நோ கூறியதும் அதற்கான காரணம் குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் அப்பா, மகன் கேரக்டர்களில் விஜய் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றன. கோலிவுட்டின் க்யூட்டான ஜோடிகளில் விஜய்யும் ஜோதிகாவும் ரசிகர்களின் ஃபேவரைட் எனலாம்.
குஷி, திருமலை படங்களில் ரசிகர்களை கவர்ந்த விஜய்-ஜோதிகா ஜோடி, அதன்பின்னர் இணையவில்லை. ஆனால், அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு ஜோதிகா நோ சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது சொன்ன அதே காரணத்திற்காக தான், தளபதி 68 படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம் ஜோதிகா.
விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியாது என ஜோதிகா நோ சொல்லிவிட்டாராம். இப்போது தளபதி 68 படத்திலும் அப்பா விஜய் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தான் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தனது கேரக்டர் குறித்து தெரிந்த பின்னரே தளபதி 68இல் இருந்து விலகிவிட்டாராம் ஜோதிகா. அதனால், அவருக்குப் பதிலாக சினேகாவிடம் தளபதி 68 படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.