fbpx

அட நம்ம சூர்யாவின் மாமனார் மாமியார் இவர்கள்தானா?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா என்று அவர் ஜோடி சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்றே சொல்லலாம்.

இவர் கடந்த 2006 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, சென்ற 2015 ஆம் வருடம் வெளிவந்த 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் திரைத்துறைக்கு திரும்பினார்.

அதோடு தற்சமயம் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகை ஜோதிகா தன்னுடைய தாய், தந்தையுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

2100 ஆம் ஆண்டிற்குள் 97% பென்குயின்கள் அழிந்துவிடும்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்...

Sun Dec 25 , 2022
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 2100 ஆம் ஆண்டிற்குள் 97 % பென்குயின்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அண்டார்டிகா கண்டம் அரிய வகை உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசிப்பிடமாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை கழகம் நடத்திய ஆய்வில், பெரிய அளவிலான […]

You May Like