தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் குடியேறிவிட்டார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது ஜோதிகா பற்றி ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார். அதாவது நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நிலையில், 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்குமாறு சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகும் ஜோதிகா நடிக்க விரும்பியதால் சிவக்குமார் தான் நடிப்பதற்கு தடையாக இருப்பார் என்று கருதி கணவர் சூர்யாவை பிரித்து மும்பைக்கு அழைத்துச் சென்று விட்டாராம்.
தன்னுடைய இரு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை தி.நகரில் சிவக்குமார் பெரிய வீட்டை கட்டினாராம். ஆனால், தற்போது சிவக்குமாரின் ஆசையை நீராசையாக்கி ஜோதிகா சூர்யாவை அழைக்க அவரும் தன் மனைவியின் பின்னால் போய்விட்டார் என பயில்வான் கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்த செயலால் தற்போது சிவக்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.