fbpx

புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்..!! வைரலாகும் புகைப்படம்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

பிரபல நடிகையான காஜல் அகர்வால் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ (Kajal by Kajal ) என்ற அழகு சாதனப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளார். இந்த கடை திறப்பு விழாவிற்கு காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்சாலுவை சிறப்பு விருந்தினராக அழைத்தார். காஜலின் புதிய தொழில் திறப்பு விழாவுக்கு வந்த கெளதம் கிச்சாலு கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு தன் அன்பு மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து நெகிழ வைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், புதிதாக காஜல் அகர்வால் தொழில் தொடங்கியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 இல் கௌதம் கிச்சாலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு “நீல் கிச்சலு” என்று பெயரிட்டு சமீபத்தில் தனது மகனின் முதல் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வெயில் காலத்தில் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? அப்படினா இந்த ஜூஸை குடிங்க..!!

Tue May 16 , 2023
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் வெளியில் செல்ல சற்று அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும். எனவே, தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை […]

You May Like