லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இப்படம் வெளியானது முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ஓடிடியில் இப்படத்தை வெளியிட்ட பிறகும், இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருக்கிறது..
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஹிந்தியில் மட்டும் இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை..
இப்படத்தின் வசூல் 400 கோடியை தாண்டியதாக கூறப்பட்ட் நிலையில், இந்த நிலையில் துல்லியமான வசூல் விவரம் கிடைத்துள்ளது. அதன் படி இந்தப் படம் தமிழகத்தில் ரூ.181.5 கோடி வசூல் செய்துள்ளது.. ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரூ.42 கோடியும், கர்நாடகத்தில் ரூ.25 கோடியும், கேரளத்தில் ரூ. 40.5 கோடியும் வட இந்தியாவில் ரூ.17.25 கோடியும் வசூல் செய்துள்ளது.. இதே போல் வெளிநாடுகளில் இந்தப் படம் ரூ.125 கோடியும் வசூலித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ.432 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது… நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.195.5 கோடி லாபம் கிடைத்துள்ளதாம். அதிக வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் ரஜினிகாந்த்தின் 2.0 படத்துக்கு அடுத்த இடத்தில் விக்ரம் படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..