பிரபல நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது நடிகர், நடிகைகள் குறித்த ஏதேனும் சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார். அந்த வகையில், தற்போது உலகநாயகன் கமல்ஹாசன், தன்னுடைய மகள் வயது நடிகையை மடக்கிப்போட்டு, ரகசிய உறவில் இருந்ததாக பகீர் தகவலை கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, திறமையால் உச்ச நடிகராக உயர்ந்தவர் கமல்ஹாசன். இவர் 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னனர் கருத்து வேறுபாடு காரணமாக 1988இல் விவாகரத்து பெற்றார். இதை தொடர்ந்து அதே ஆண்டு, நடிகை சரிகாவை காதலித்து, 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் பிறந்தனர். பின்னர் இரண்டாவது மனைவியையும் 2004இல் கமல்ஹாசன் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் கமல்ஹாசன். ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு, மகளின் வருங்காலத்தை எண்ணி கமல்ஹாசனிடம் இருந்து விலகுவதாக கூறினார் கௌதமி.
கௌதமி கமல்ஹாசனை விட்டு விலக, இந்த நடிகையுடன் வைத்திருந்த தொடர்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம் என அப்போதே கிசுகிசுக்க பட்ட நிலையில், இதுகுறித்து மீண்டும் பேசி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயில்வான் ரங்கநாதன், இதுகுறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களையும் கூறியுள்ளார். அதாவது உலக நாயகன், பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் தான் ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். அவருடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து அவரை நடிக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்த பூஜா குமாருடனும் கமல் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.