fbpx

ஒரே நாளில் ரிலீசாகும் கமல்ஹாசனின் 2 திரைப்படங்கள்..!! செம ட்விஸ்ட்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு கமல்ஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்கும் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை ஆரம்பிக்க உள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் மற்றொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதன்படி, பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசனும் வில்லனாக நடிக்க உள்ளார். இப்படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், இது இந்தியன் 2 படத்துடன் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

புராஜெக்ட் கே படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கியவர் ஆவார். புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல்….! சல்லி சல்லியாக வெட்டி வீசப்பட்ட இளைஞர் போலீசார் குவிப்பு….!

Fri Jun 23 , 2023
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத […]
குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக் கூடு..!! மிரண்டுபோன மக்கள்..!! நடந்தது என்ன..? திகில் சம்பவம்..!!

You May Like