fbpx

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்கும் கமல்..!! SK 21 படத்தின் புதிய அப்டேட்..!! ரசிகர்கள் செம குஷி..!!

சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக இருக்கிறது. அறிவியல் சார்ந்த கதையாக எடுக்கப்பட்டுள்ள அயலான் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அயலான் படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹிந்தியில் வெளியிடுகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் ஒரு படம் பண்ண உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளதால் அவருடைய படத்தை தயாரிக்க கமல் முன்வந்துள்ளார். அந்த வகையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ராஜ்குமார் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதுவரை சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். ஆனால், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மாவீரன் படப்பிடிப்பு மிக விரைவில் முடிய உள்ளதால் சிவகார்த்திகேயன், கமல் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு சீக்கிரம் தொடங்க உள்ளது. மேலும் படத்தில் மற்ற நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகிறது. இப்போது எஸ்கே 21 படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயனின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Chella

Next Post

அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..!! எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா..? இந்திய வானிலை மையம் அலெர்ட்..!!

Wed May 3 , 2023
நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாட்டில் தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில், வட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசி வெப்பநிலை கடந்த சில வாரங்களாக உச்சம் தொட்டது. இந்நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் […]

You May Like