fbpx

’இந்தியன் 2’ ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த கமல்..! வைரலாகும் புகைப்படம்..!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று இணைந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019இல் துவங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும், இந்தப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான `விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஏற்கனவே, படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இன்னும் முக்கியமான பகுதிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. இதில், நடித்த நடிகர் விவேக் இறந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மீண்டும் படமாக்க வேண்டிய சூழலும் உருவானது. இந்தியன் 2 படப்பிடிப்பு மறுபடி துவங்கும் என ஆகஸ்ட் 24ஆம் தேதி ட்வீட் செய்திருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

’இந்தியன் 2’ ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த கமல்..! வைரலாகும் புகைப்படம்..!

அதன்படி, இந்த மாத துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கியது. கமல்ஹாசன் இல்லாத காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார். இந்தப் படப்பிடிப்புக்கென சென்னை பிரசாத் லேபில் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், லைக்கா புரொடக்ஷனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகூல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Chella

Next Post

’மாஸ் காட்டும் அஜித்’..! ’துணிவு’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு..!

Thu Sep 22 , 2022
’துணிவு’ படக்குழு சர்பிரைஸாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது இரண்டாம் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் 3-வது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ’ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. 70% படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில், நேற்று இந்த […]
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை..! ’துணிவு’ படத்தின் கதை இதுதான்..!

You May Like