வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்ற கார்த்தியின் ’’சர்தார் ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது.
மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வரும் படங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விருமன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வரவேற்பு பாரட்டுக்களைப் பெற்றதோடு வசூலில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவரது நடிப்பில் சர்தார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரஜிஷா விஜயன் , ராஷி கண்ணா நடித்துள்ளனர். கொரோனாவால் பல முறை படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்க உள்ளது.
இந்த படத்தில் கார்த்தி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மற்ற வியாபாரங்கள் மூலம் இதுவரை 64 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தி டப்பிங் உரிமைக்கு 11 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமங்கள் ஆகியவற்றிற்கு 31 கோடி வசூலாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.