கமல்ஹாசன் நடித்த படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு திரைப்படம் நாயகன். இப்படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்திருந்தவர் தான் கார்த்திகா. 80-களில் மலையாளத்தில் இருந்த டாப் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். அங்கு பிரபலமாக அப்படியே தமிழில் நாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அப்படத்திலும் நடித்து மக்களின் மனதை வென்றார். சினிமாவில் தொடர்ந்து சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
1988ஆம் ஆண்டு சுனில்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். கால்நடை மருத்துவரான அவரது மகனுக்கு 2020 ஜனவரி மாதம் பூஜா என்பவருடன் திருமணம் ஆனது. அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறார். தற்போது நடிகை கார்த்திகா தனது மகன் மற்றும் பேரனுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அட இவரா அது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.