தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் ஏறு மயிலேறி பாடல் வெளியாகி தூள் கிளப்பி வருகின்றது..
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார்’. அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்து உள்ள இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வரும் தீபாவளியையொட்டி அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். தெருக்கூத்து நாடகத்தில் பாடப்படும் நாட்டுப்புற பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.