fbpx

விஜய்யின் அந்த விஷயத்தை பார்த்து காதலில் விழுந்த கீர்த்தி சுரேஷ்..!! உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்..!!

தமிழ் சினிமா திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பினையும் தாண்டி இவரின் அழகிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் ஒரு விஷயத்தைப் பார்த்து கீர்த்தி சுரேஷ் மயங்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பைரவா படத்தில் நடிக்கும் போது விஜய்யின் நடனத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் மயங்கிவிட்டார். மேலும், கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலித்து வருவதாகவும் இதனால் தான் விஜய் சங்கீதாவுடன் உறவை முடித்து கொண்டார் என்று பல செய்திகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இது போன்ற கிசுகிசுக்களில் எவ்வித உண்மையும் இல்லை. கீர்த்தி சுரேஷ் விஜய் காதல் விவகாரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இவை யாவும் வதந்தி. உண்மையாக இருந்தால் விஜய் கீர்த்தி சுரேஷை தனது லியோ படத்தில் அல்லது தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம். இந்த வதந்திகளை கீர்த்தி சுரேஷ் கண்டுகொள்வதில்லை அவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் என செய்யாறு பாலு அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Chella

Next Post

மாற்றுத்திறனாளிகளே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா……? அப்படி என்றால் இதை உடனே செய்யுங்கள்…..!

Wed Jul 5 , 2023
ராணுவ வீரர்களின் வாரிசுகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆரம்பமாகி இருக்கிறது. ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஒரு புதிய […]

You May Like