fbpx

“பறக்க பறக்க துடிக்குதே” பாடலில் வருவது போல் போட்டோவை வெளியிட்ட குஷ்பூ சுந்தர்!!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர். நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவரும் ஆவார். இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலானார் குஷ்பு, இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் விஜயின் வாரிசு படித்திலும் நடித்து வருகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள சுந்தர் சி-யின் காஃபி வித் காதல் படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் பிசியாக இருக்கும் குஷ்பூ சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். முதுகெலும்பு தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பு முன்னதாக மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார், அந்த பதிவை பார்த்த அனைவரும் கமெண்ட் செக்‌ஷனில் அவர் விரைந்து குணமாக, என வாழ்த்தியும், குஷ்புவுக்கு இப்படி ஆயிற்றே எனக் கவலை தெரிவித்தும் வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பு தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். கிரேனில் சுந்தர் சி-யும், குஷ்பூவும் அமர்ந்த படி இருக்கும் அந்த புகைப்படத்தை போட்டு “என் கணவருடன் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று.. 95ல்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கமெண்ட் செக்‌ஷனில் “உயரமாக பறக்கும் ஜோடி மற்றும் தனுஷின் “பறக்க பறக்க துடிக்குதே” பாடலின் வரிகளை போட்டு பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Kathir

Next Post

’கால் முட்டியை உடைக்கனும்’..!! நடிகையை திட்டி பேச ரூ.5 ஆயிரம் வாங்கிய கே.ராஜன், கஞ்சா கருப்பு..!!

Sun Oct 9 , 2022
இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகி வராத ஆத்திரத்தில், கே.ராஜன் மற்றும் நடிகர் கஞ்சா கருப்புக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து மேடையிலேயே சம்பந்தப்பட்ட நடிகையை ஆபாசமாக திட்டவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  ‘ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குனர் மோகன் ஜி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஏ.ஆர். கேந்திர முனியசாமி என்பவர் […]
’கால் முட்டியை உடைக்கனும்’..!! நடிகையை திட்டி பேச ரூ.5 ஆயிரம் வாங்கிய கே.ராஜன், கஞ்சா கருப்பு..!!

You May Like