பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் தற்போது நான்கு நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரீட்சியமான முகங்களை விட பரீட்சையமில்லாத பல புது முகங்கள் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் tik tok மூலம் பிரபலமான இருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான நபர் ஜி.பி.முத்து தான். பொதுவாக பிக்பாஸ் ஆரம்பித்த சில வாரங்களில் தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்படும். ஆனால், ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் தொடங்கும் முன்னரே ஆர்மிக்கள் அதிகம் இருந்தது.
இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதலே ஜி.பி.முத்துவிற்கு சமூக வலைதளத்தில் அதிக ஆதரவு கிடைத்திருந்தது. மேலும், யூடியூபில் அவர் செய்த அதே வெகுளித்தமான செயல்களை பிக்பாஸிலும் அவர் செய்து வருவதால் அவருக்கு ஆர்மி படை மேலும் அதிகமாகி வருகிறது. இதனால் அவரை எதாவது தவறாக பேசிவிட்டால் அவரின் ஆர்மி பொங்கிவிடுகிறது. இப்படி ஒரு நிலையில் ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமியை திட்டி தீர்த்து வருகிறார்கள். பிக் பாஸில் தற்போது club house என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஜிபி முத்து, ஆயிஷா,. தனலட்சுமி, ஜனனி ஆகிய 4 பேரும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள். இந்த டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா ஜிபி முத்துவை nominate செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து பிற அணிகளுக்கும் வேலை செய்கிறார் என்பதுதான். இந்த காரணத்தால் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி ஆகியோருக்கு ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், ஜிபி முத்து கார்டன் ஏரியாவில் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆயிஷாவும் தனலட்சுமியும் அவரிடம் பேச முயன்றனர்.
அப்போது ஜிபி முத்து ‘தயவு செய்து இங்கு வராதீங்க’ என்று சொன்னார். அதற்கு தனலட்சுமி ‘நீங்க யார் அதை சொல்ல’ என்று கூற அதற்கு ஜிபி முத்து, நீங்கள் இருவரும் தான் நான் மன்னிப்பு கேட்ட பின்னரும் முகத்தை திருப்பி முறைத்தீர்கள் என்று கூற அதற்கு ஆயிஷாவும் தனலட்சுமி நாங்கள் அப்படி முறைக்கவே இல்லையே என்று ஜி.முத்துவிடும் வாக்குவாதம் செய்தனர். உடனே தனலட்சுமி ‘ரொம்ப நடிக்காதீங்க’ என்று சொன்னதும் செம டென்ஷனான ஜிபி முத்து, எழுந்து வந்து தனலட்சுமி இடம் நான் நடிக்கிறேன் என்று நீ பார்த்தியா என்று வாக்குவாதம் செய்தார்.
மேலும், கேமரா முன் சென்ற ஜிபி முத்து ‘நான் நடிக்கிறேனா இல்லையா என்பது என் நண்பர்களுக்கு தெரியும் என்று கலங்கியபடி கூறியிருந்தார். இதன் பின்னர் டைனிங் ஏரியாவில் தனலட்சுமி கூறிய அந்த வார்த்தையை நினைத்து ஜி பி முத்து கண்ணீருடன் அமர்ந்திருந்தார். இதை கண்ட மற்ற போட்டியாளர்களும் அவரை சமாதானம் செய்தனர். அதுமட்டுமின்றி உள்ளே ஒரு இடத்தில் தனலட்சுமி நிவாஷினி உடன் பேசுகையில், ஜிபி முத்தா, அந்த ஆளு ஒரு லூசு என கூறியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து யார் லூசுனு கமல் சார் வர்றப்ப தெரியும் என ஜிபி முத்து ஆர்மியினர் கூறி வருகின்றனர்.
இப்படி ஜிபி முத்துவை தனலட்சுமி தொடர்ந்து அசிங்கப்படுத்திக் கொண்டும் வம்பிழுத்துக்கொண்டும் இருப்பதால் சமூக வலைதளத்தில் பலரும் தனலட்சுமியை தீட்டி தீர்த்து வருகிறார்கள். மேலும், இந்த முறை தனலட்சுமி எலிமினேஷனில் வந்தால் அவரை நிச்சயம் வெளியில் அனுப்பி விடுவோம் என்றெல்லாம் ஜிபி முத்துவின் ஆர்மிகள் கூறி வருகிறார்கள். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தனலட்சுமியை கேலி செய்து பல மீம்களை பதிவிட்டு வருகின்றனர். ஜிபி முத்துவை போல தனலட்சுமியும் டிக் டாக் மூலமாக தான் பிரபலமானார் என்றாலும் ஜிபி முத்து அளவிற்கு தனலட்சுமி அறியப்பட்ட ஒரு முகம் இல்லை. எனவே, அவர் ஜிபி முத்துவை பகைத்துகொள்வது நல்லது இல்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.