fbpx

அம்மன் படத்தில் வந்த குட்டி அம்மனை நியாபகம் இருக்கா? – வைரலாகும் குட்டி அம்மன் புகைப்படம்!!

அம்மன் திரைப்படத்தில் குழந்தை அம்மனாக நடித்த நடிகை சுனைனா பாதமின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ஒரு காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் சாமி படங்களும் ஹிட் கொடுத்து வந்தது.  90ஸ் கிட்ஸ்களுக்கு சாமி படம் என்றாலே முதலில் நியாபகம் வருவது அம்மன் திரைப்படம் தான், அதேபோல் சாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் என மக்கள் கொண்டாடினார்கள். 1995 ஆம் ஆண்டு ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் கிராபிக்ஸுக்கு மட்டுமே ரூ. 80 லட்சம் செலவு என கூறப்படுகிறது.

இதில் அம்மன் வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை போல குழந்தை அம்மனாக நடித்து ஒரு சிறுமி அசத்தியிருப்பார்.

அந்த குழந்தையின் பெயர் சுனைனா பாதம், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1996ம் ஆண்டு படம் நடித்தவர். அதன்பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை. பின் திருமணம், குழந்தைக்கு பிறகு ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரிஸில் நடித்தார், அதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார்.

சமந்தாவின் ஓ பேபி, அஜித்தின் வலிமை போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Post

USA | அருணாச்சலப் பிரதேச விவகாரம்.!! இந்தியாவிற்கு கை கொடுத்த அமெரிக்கா.!! சீனாவிற்கு கடும் கண்டனம்.!!

Wed Apr 3 , 2024
USA: அருணாச்சலப் பிரதேசத்தின் பெயர்களை மாற்றி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போது இடங்களுக்கு சீனா பெயரிட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீனா அரசு தங்களது பிராந்திய உரிமைக் கோரளுக்காக ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பைடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவம் அல்லது பொதுமக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு மூலமாக ஊடுருவுதல் அல்லது அத்துமீறல்கள் […]

You May Like