’டான்’ திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை தமன்னா, சிவராஜ்குமார் ஆகியோரும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ’டான்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் அடுத்த படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் ’தலைவர் 170’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி, தனது 2-வது படத்திலேயே ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.