fbpx

’படுதோல்வியை சந்தித்த லைகர்’..! நடிகர் விஜய் தேவரகொண்டா எடுத்த திடீர் முடிவு..!

லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். குத்துச்சண்டை வீரரான தனது அப்பா தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம் தான் லைகர். விஜய் தேவரகொண்டாவுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் இப்படத்தில் நடித்துள்ளார். உலகெங்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை பெற்றது. முதல் நாளில் இப்படம் ரூ.33.12 கோடி வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

’படுதோல்வியை சந்தித்த லைகர்’..! நடிகர் விஜய் தேவரகொண்டா எடுத்த திடீர் முடிவு..!

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை குறைந்து தற்போது வரை ரூ.55 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். லைகர் திரைப்படத்தால் தன்னுடைய 60 சதவீதம் பணத்தை இழந்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் வராங்கல் ஸ்ரீனு தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை சார்மி கபூர் மற்றும் பிற இணை தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் லைகர் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க போவதாக இயக்குநர் பூரி ஜெகந்நாத் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

சுஷ்மிதா சென், லலித் மோடி பிரேக் அப்..? வதந்திகளை தூண்டிய புதிய டிபி...

Tue Sep 6 , 2022
வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இதனிடையே நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி சமீபத்தில் அறிவித்தார்.. சுஷ்மிதா சென் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து கொண்ட அவர், தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், […]

You May Like